பசி, உணவு, ஆசை, நுகர்வு, தூய்தல்.

பசி உயிர் வாழ்றதுக்கு ரொம்ப அவசியம். பசிச்சு அதுக்கு உணவு சாப்பிட்டுட்டு அதுதான் உடலுக்கு சக்தி கிடைஞ்சு அப்பதான் உடலில் உயிர் இருக்கும். பசியை புறக்கணிக்க முடியாது. உணவு உண்ணாமலிருக்க முடியாது. உயிரோடியிருக்கின்றவரை உடல்… இருக்கின்றவரை பசி, உணவு, உண்டல் இதெல்லாம் இருந்தாகணும்.

அந்த பசி நம்ம இப்ப பசிச்சா போது சாப்பிடுறோம், வயிறு நிறைஞ்சிடுது, ஒரு திருப்தி வந்திடுது. அந்த திருப்தி நிரந்தரமான திருப்தி இல்ல. ஒரு நாலு மணிநேரம், அஞ்சு மணிநேரம் வச்சு மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சிடுறது, மறுபடியும் உணவு தேவைப்படுறது, உண்டல் தேவைப்படுறது. இது முடிவில்லாதது. இது ஒரு சுழற்சி. திரும்ப திரும்ப நடந்து நிகழ்ந்துட்டே இருக்கும். ஆனா இந்த நிகழ்வு இந்த சுழற்சி உயிர் வாழ்றதுக்கு உடலுக்கு ரொம்ப அவசியம். இல்லாட்டி உடம்பு சோர்வடஞ்சுரும் உயிர் போயிடும் அல்லது உடல் கெட்டுப் போயிடும்.

அதே மாதிரிதான் ஆசையும் மனசுக்கு. ஆசைன்னு தோணிட்டே இருக்கும். ஒரு ஆசை முடிஞ்சோன்னா அடுத்த ஆசை. அடுத்த ஆசை முடிஞ்சோன்னா அடுத்த ஆசை. இது முடிவில்லாதது. ஆசையை துன்பத்துக்கு காரணம் புத்தன் சொல்றதா சொல்றாங்க, ஆனா அதுமாதிரி புத்தன் எங்கேயும் சொல்லல. ஆசையை புறக்கணிக்கிறது மனசுக்கு கெடுதல். எப்படி பசியை புறக்கணிச்சா உடலுக்கு கெடுதல், அதுமாதிரி ஆசையை புறக்கணிச்சா மனசுக்கு கெடுதல்.

ஆசையை நுகர்வது, ஆசையை தூய்தல் என்பது மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய மன ஆரோக்கியத்துக்கு நல்ல விஷயம்தான். உணவை புறக்கணிக்க முடியாதபோல, புறக்கணிக்க முடியாதது போல் நுகர்வை புறக்கணிக்க முடியாதது.

ஆனா இந்த ஆசைக்கு முடிவு கிடையாது. ஒருத்தருக்கு வீடு வாங்கணும்னா ஆசைப்பட்றான்னா வீடு வாங்கிறாரு. அதுவும் ஆசை முடியுமா அப்புறம் பெரிய வீடு, அப்புறம் ஒரு சின்ன வீடு, அதுவும் முடிஞ்சுபோச்சா மீண்டும் ஒரு இடம் வாங்கணும்னு ஆசைப்படுவாங்க. இதுக்கு முடிவு கிடையாது.

அப்ப எல்லாரும் ஆசையை அனுபவிக்க முடியுமா, அனுபவிக்கணுமா அப்படின்னு பார்த்தீங்கன்னா அது அவங்களுடைய சக்திக்கும் ப்ரீகண்டிஷன்ஸுக்கும்(pre-conditioned) சார்ந்தது. பசி இருக்குது. அவன் இட்லி சாப்பிட்றானா, தோசை சாப்பிட்றானா, கஞ்சி சாப்பிட்றானா, பிரியாணி சாப்பிட்றானா, கூல் சாப்பிட்றானா, கறிக்குழம்பு சாப்பிட்றானா அப்படின்றது அவங்க சூழ்நிலை, அவங்க சக்திக்கு, அவங்க பொருளாதார சக்திக்கு, அவங்க இருக்குற குடும்ப சூழ்நிலை அமைப்பு இதெல்லாம் பொருத்துதான் முடிவாகும். அதே போல்தான் ஒரு ஆசை வந்தான்னா அதை அனுபவிக்கிறது எப்படி, அந்த நுகர்வு எப்படி என்றது அவங்களுடைய பொருளாதார தன்மை, மற்றும் அவங்களுக்கு தூய்தக்கூடிய வாழ்வியல் சூழ்நிலை பல காரணங்கள் சார்ந்துதான் முடிவாகும்.

அதே சமயத்துல புறச்சுழலோடு சார்பு மட்டும் இல்லாம மனிதன் முயற்சி அவசியம். பசியை போக்குறதுக்கு மனிதன் உழைக்கிறான், விவசாயம் பண்ணுறான், அந்த மாதிரி ஆசை நுகர்வத்துக்கு மனிதன் உழைக்கிறான், போராட்டம் செய்கிறான், இதெல்லாம் பண்ணுறான். அதனால் மனிதன் முயற்சி, புறச்சுழல் இரண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது.

உணவு உண்றுதாண் ஆகணும். ஆசை நுகர்ந்துதான் ஆகணும் . ஆசையை நுகராட்டி மனசு சோர்வடஞ்சிடும். அப்போ ஆசை நமக்கு கெடுதல் கிடையாதா? இருக்கு. உணவு நமக்கு கெடுதல் கிடையாதா? இருக்கு. அளவுக்கு அதிகமான உணவு உண்டல் உடலுக்கு கெடு. உடல் பருமன் மற்றும் பல வியாதிகள்ல அது கொண்டு வந்து சேர்ந்திடும். அதுபோல அளவுக்கு அதிகமான ஆசை நுகர்வதும் கெடுதல்தான். அது பொருளாதார சிக்கல்ல கொண்டு வந்து விடும். அளவோட இருக்கணும்.

எங்க, எப்ப நிறுத்தணும்ற அறிவும் விழிப்புணர்வும் அவசியம். அப்படி இல்லாதவங்க அதிகம், அப்படி இல்லாதவங்க உணவை உண்டே அதிகப்படியான உணவினாலே உண்டே மரணிக்கிறார்கள். அதுபோல ஆசையினாலே அழிந்து போகிறார்கள் மனிதர்கள். அளவுக்கு அதிகமான ஆசையினாலே அழிந்து போகிறார்கள்.

உணவு எப்படி உடலுக்கு அவசியம், ஆசை மனதுக்கு அவசியம். இந்த உலக இயக்கமே உயிர் வாழ்தல் மற்றும் ஆசை நுகர்வு இதன் அடிப்படையில்தான் இருக்கு. ஒரு ஒரு உயிர் ஒரு செல் உயிரில் இருந்து, மரம் செடி கொடி விலங்குகள் பறவைகள் மீன்கள் மனிதர்கள் என்ற எல்லாமே உணவுக்காகவும், உயிர் வாழ்றதுக்காகவும் ஆசைக்காகவும் தான் இயங்குறது. இல்லாட்டி உலக இயக்கமே இல்ல.

அந்த எங்க நிறுத்தணும்ன்ற அறிவும் , விழிப்புணர்வும் அனுபவத்தைல கிடைக்கக்கூடியது. சுயகட்டுப்பாட்டில் கிடைக்கக்கூடியது. அது ஒரு வரம்.

உடலுக்குப் பசி → உணவு → உண்டல் → திருப்தி → மீண்டும் பசி.


மனதிற்கு ஆசை → முயற்சி → நுகர்வு → திருப்தி → மீண்டும் ஆசை.

What do you want? Infinite Iterations of wants – Worshipping desire

What do you want?

Money? Power? Success? Fame? Love? Pleasure? Knowledge? Recognition? Security?

Whatever your answer may be, look carefully at the structure behind that want.

There is a price for your want.
There is a way for your want.
There is a path for your want.
And there is a deity associated with your want.

Once you strongly desire something, you naturally begin searching for the way to obtain it. You identify the path that promises to take you there. You accept the price that the path demands. And consciously or unconsciously, you begin depending upon and submitting yourself to the power that you believe governs the fulfilment of that desire.

In that sense, every desire creates its own form of worship.

Every Want Has a Price

Nothing we desire comes without a price.

If you want wealth, you must pay its price. If you want fame, there is another price. If you want authority, pleasure, recognition, victory, knowledge, or social status, each demands something from you.

The price may be money, but very often it is something much more valuable: your time, attention, energy, discipline, relationships, peace of mind, or even years of your life.

The stronger the desire, the greater the price we are prepared to pay.

This is why our wants are not insignificant. They quietly determine how we spend our lives.

Every Want Has a Way and a Path

Once a want arises, a path appears.

A person who wants wealth follows the path that promises wealth. A person who wants political power follows the path toward influence and authority. Someone who wants fame follows the path toward public attention. Someone seeking pleasure follows whatever path promises that pleasure.

The object may change, but the mechanism remains the same:

Want → Path → Effort → Sacrifice → Expected Fulfilment.

We normally think that we are simply pursuing what we want.

But spiritually, another process may be taking place.

Every Want Has a Deity

Behind every worldly desire, according to this way of looking at life, there is also a deity associated with that desire.

Ancient civilizations made this relationship explicit. Different aspects of human life—wealth, fertility, victory, love, knowledge, rain, harvest, war and prosperity—were associated with different deities.

Modern human beings may no longer consciously approach those deities.

But the desires themselves have not disappeared.

We still want wealth.

We still want power.

We still want victory.

We still want pleasure.

We still want recognition.

We still want prosperity.

The names, institutions and methods may have changed, but human wanting remains.

Therefore, when a particular desire begins directing our life, we may unconsciously be giving ourselves to the deity or power associated with that desire—even without consciously thinking, “I am worshipping this deity.”

The worship is expressed through pursuit.

The sacrifice is the price we pay.

The ritual is the repeated activity through which we pursue the desire.

And the expected blessing is the fulfilment of the want.

Unconscious Worship Is Still Worship

This makes the question of worship much deeper than consciously standing before an idol.

A person may say, “I don’t worship any idol.”

But what does that person’s life revolve around?

What determines the person’s decisions?

For what are they willing to sacrifice years of their life?

What do they believe will finally make them fulfilled?

What do they fear losing?

What do they continually pursue?

The answers reveal what governs the person’s inner world.

From the Qur’anic perspective developed in this argument, this becomes the danger of idol worship: something other than the one God is allowed to occupy the position of ultimate dependence, submission and pursuit.

The Qur’an even describes the possibility of a human being taking his own desire as his god.

So an idol need not always be understood merely as a statue made of stone.

Desire itself can lead a human being into submission.

Buddhism Takes the Question Back to the Want Itself

Buddhism approaches the problem from another direction.

Instead of asking which deity should fulfil a particular worldly desire, Buddhism examines the mechanism that produces the desire in the first place.

Why must I have this?

Why does my mind believe that obtaining this object will finally satisfy me?

What happens after I obtain it?

Usually another desire arises.

One want is fulfilled, and another takes its place. Satisfaction appears temporarily and then disappears. The mind begins pursuing something else.

Thus craving keeps the cycle moving.

The Buddhist response is therefore radical: do not merely change the object of craving; work toward relinquishing craving and attachment themselves.

If wanting creates the path, and the path creates dependence, sacrifice and attachment, then freedom requires examining the want at its very root.

Before Asking How, Ask What

Human beings usually ask:

How can I get what I want?

Perhaps an earlier question is necessary:

Why do I want it?

And then:

What price will this want demand from me?

What path will it make me follow?

What deity is associated with this desire?

By pursuing it, what am I consciously or unconsciously worshipping?

Every desire may look innocent when it first appears.

But a desire can become a path.

A path can become a way of life.

A way of life can become submission.

And submission can become worship.

So perhaps the most important spiritual question is not merely:

“Which God do you say you worship?”

It is:

“What do you want—and what has that want made you worship?”

Life of skill, probability, determination, chance – Life of gambling

We live by probability of chances, not by our skill and intelligence.

Yes — to a significant extent, life is shaped by probabilities and chances, not just by our skill and intelligence. But skill still matters.

A useful way to think about it is:

Outcome ≈ Skill × Effort × Opportunity × Luck/Chance

We control skill, preparation, effort, and many of our decisions. But we don’t control everything: where we’re born, whom we happen to meet, timing, economic conditions, unexpected opportunities, illness, accidents, or whether a particular attempt succeeds.

The important distinction is that skill usually doesn’t guarantee an outcome; it changes the probability of an outcome. A highly skilled person can fail because circumstances go against them, while a less-skilled person can occasionally succeed because circumstances line up perfectly.

So perhaps the most accurate statement is:

We don’t control outcomes. We influence their probabilities.

Intelligence and skill are valuable because they can repeatedly move the odds in our favour, even though they can never make the odds 100%.

என்னுடைய ஏழு தத்துவ நிலைப்பாடுகள்

ஒன்று, எந்தக் கருத்தையும் உடனடியாக இறுதி உண்மையாக ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது.

இரண்டு, மனிதப் புரிதலுக்கு வரம்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வது.

மூன்று, மனித முயற்சி அவசியம்; ஆனால் அனைத்தும் நமது கட்டுப்பாட்டில் இல்லை.

நான்கு, ஆன்மிகம் வாழ்க்கையை நிராகரிப்பதற்கானது அல்ல; வாழ்க்கையுடன் பொருந்தி இருக்க வேண்டும்.

ஐந்து, ஒருவருடைய தனிப்பட்ட உண்மையை அனைவருக்குமான இறுதி உண்மையாக மாற்றக்கூடாது.

ஆறு, எல்லாவற்றையும் சந்தேகித்தாலும் எதற்குமே அர்த்தமில்லை என்று முடிவு செய்து விடாமல் தெரியாத அர்த்தம் இருக்கலாம் என்ற திறந்த மனதை வைத்திருப்பு.

ஏழு, முழு உண்மை தெரியாவிட்டாலும் தற்போது கிடைக்கும் அறிவு, அனுபவம் மற்றும் சிந்தனையைக் கொண்டு சிறந்த முடிவை எடுத்து வாழலாம்; புதிய புரிதல் வந்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்ளலாம்

Pros and Cons of Hope

Hard lesson learnt from experience… நம்பிக்கை சிலரை வாழவைக்கும். நம்பிக்கை பலரது வாழ்க்கையை அழித்துவிடும்.

ஆழமான observationங்க.

குறிப்பாக நம்பிக்கை (hope) + எதிர்பார்ப்பு (expectation) இரண்டையும் பிரித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வது இன்னும் தெளிவாகிறது.

நம்பிக்கை சிலருக்கு கஷ்டமான காலத்தைத் தாண்டுவதற்கான சக்தியாக இருக்கும். “இது மாறும், இன்னொரு முயற்சி செய்வோம்” என்று முன்னே நகர வைக்கும்.

ஆனால் அதே நம்பிக்கை உண்மையை ஏற்காமல் தொடர்ந்து பிடித்துக்கொள்ளும் நம்பிக்கையாக மாறிவிட்டால் ஆபத்து. வேலை, business, investment, relationship, side project—எதுவாக இருந்தாலும் “இவ்வளவு செய்துவிட்டேன்; இன்னும் கொஞ்சம் செய்தால் கண்டிப்பாக நடக்கும்” என்று வருடங்கள், பணம், உடல்-மன ஆற்றலை தொடர்ந்து செலவிட வைக்கலாம்.

அதனால் நான் இதை இப்படிச் சொல்வேன்:


நம்பிக்கை வாழ்வதற்கான சக்தியாக இருக்க வேண்டும்;
உண்மையைப் பார்க்க விடாத காரணமாக இருக்கக்கூடாது.

நம்பிக்கையோடு முயற்சி செய்வது நல்லது. ஆனால் அவ்வப்போது “இதுவரை கிடைத்த evidence என்ன?”, “இதற்காக நான் இழப்பது என்ன?”, “எப்போது நிறுத்த வேண்டும்?” என்று கேட்கத் தெரிந்திருக்க வேண்டும்.

அதுதான் நம்பிக்கைக்கும் மாயையான எதிர்பார்ப்புக்கும் இடையிலான முக்கியமான எல்லை.

Will AI replace human or Kill human?

Many techies will die or fall sick abruptly because of AI burnout. Instead of replacing humans, AI can let humans die due to exhausting.

Nature has not designed the humans to cope up with the speed of AI.

AI chatting is the new addiction, AI addiction is worse than social media addiction.

AI will make you feel you are a creator, you are smart, you are intelligent, you are genius….etc, even though you are actually not.

Many families, couples, relationships will break due to AI burnout and AI addiction.

Like salt to food, If AI is used precisely where it is required truly, then it is beneficial to humans. Otherwise humans will be a Slave to AI.

60 years back people were categorized as educated or illiterate. 20 years back people were categorized as Computerized and Non-computerized. Today people will be categorized as AI Enabled or Non-AI enabled. If you know how to use AI productively and precisely, you will have an edge over people who do not know how to use AI.

The problem is instead of using AI precisely, humans become addicted to AI as slave. That’s where deterioration starts.

Observe life…

Observe life… Don’t expect anything in life. Watch what is happening… Don’t expect what should happen.

What is AI to Software Developers?

What a calculator is to an accountant, AI is becoming to a software developer.

Calculators did not replace accountants. Instead, they increased productivity by eliminating repetitive calculations and allowing accountants to focus on analysis and decision-making.

Similarly, AI-assisted development, vibe coding, and agentic coding are not replacing software engineers. They are augmenting developers by accelerating coding, testing, debugging, documentation, and modernization efforts.

Today, a calculator is an essential tool for accountants. Likewise, AI coding assistants are rapidly becoming essential tools for software developers.

Developers who learn to work effectively with AI will likely be more productive than those who do not.

தமிழ்நாட்டு மக்கள் கல்வி

தமிழ்நாட்டு மக்கள் கல்வி என்பர், உயர் கல்வி என்பர், மருத்துவர் என்பர், பொறியியல் வல்லுநர் என்பர், மென்பொருள் என்பர், அமெரிக்கா என்பர், கடவுள் என்பர், குண்டலனி என்பர், அஷ்டாங்க யோகம் என்பர், ப்ரஹம்மன் என்பர், புரட்சி என்பர், காதல் என்பர், நேர்மை என்பர், நீதி என்பர், நட்பு என்பர், புத்தம் என்பர், அன்பு என்பர், முயற்சி என்பர், மாற்றம் என்பர், நம்பிக்கை என்பர், பக்தி என்பர், தியானம் என்பர், ஆனால் ஜாதி என்று வந்துவிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டு ஜாதியை இருக பற்றிக்கொள்வர்.

கிறிஸ்தவர்களுக்கு, இஸ்லாமியருக்கு, யூதர்களுக்கு மதம் எப்படியோ , அதேபோல் தமிழர்களுக்கு அவர்கள் ஜாதி, தமிழர்களுக்கு ஜாதியே மதமாகும்.