மனிதனுக்கு எப்போது கடவுள் தேவை? எப்போது கடவுள் தேவையில்லை?

தனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எதிர்பாக்கும் பொழுது, மனிதன் கடவுளிடம் பிரார்த்திக்கிறான், கடவுளை நினைவுகூர்கின்றான் , கடவுள் இருப்பதாக நம்புகின்றான்.

பிறரிடம் கோவப்படும்போது , பிறரை திட்டும்பொழுது, பிறரை ஏமாற்றும்பொழுது, பிறரை பயன்படுத்திக்கொள்ளும்பொழுது, பிறரை மட்டப்படுத்தும்பொழுது, அகங்காரமும் ஆணவமும் பொறாமையும் தலைவிரித்து ஆடும்பொழுது, மனிதன் கடவுளை மறந்துவிடுகின்றான். பிறரை ஏமாற்றும் பொழுது, சுரண்டும் பொழுது, அதிகாரம் செய்யும்பொழுது, அடக்குமுறை செய்யும்பொழுது, பிறரை குறை சொல்லும்பொழுது , பிறர்மீது குற்றம் சுமத்தும்பொழுது, மனிதனுக்கு கடவுள் தேவையில்லை.