ஆப்பினை அசைத்திட்ட குரங்கு

நாப்பிளக்க பொய் உரைத்து !!நவ நிதியும் தேடி !!நலன் ஒன்றுமே அறியா !!நாரீயரைக் கூடி பின் !!பூப்பிளக்க வந்துதித்த !!புற்றீசல்போல !!புலுபுலென கலகலவென !!புதல்வர்களைப் பெறுவீர் !!காப்பதற்கும் வகை அறியீர் !!கைவிடவும் மாட்டீர் !!கவர்பிளந்த மரத்தினிடை !!                                           கால்  நுழைத்துக்கொண்டே !!
ஆப்பதனை அசைத்து விட்ட !!
குரங்கதனைப் போலவே !!
அகப்பட்டீர் !! அகப்பட்டீர் !!
கிடந்தது உழல !!
அகப்பட்டீர் !!