மனதின் தற்போதய அரிப்புகள்…

எதையாவது தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும், அர்த்தப்படுத்தி கொள்ள வேண்டும், வகைப்படுத்த வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

கடன்களை அடைக்க வேண்டும்.

பைக் ஓட்ட வேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும், வாக்கிங் போக வேண்டும், டயட் இருக்க வேண்டும், உடல்  எடை குறைய வேண்டும். ஆரோக்கியத்துக்கு ஏதாவது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.

விபாசனா பயிற்சியில் தியான அனுபவங்கள், தியான பரவசங்கள், தியான சாகசங்கள் ஏற்பட வேண்டும்.

புத்தர் சொன்னது புரிய வேண்டும்.

ஞானம் அடைய  வேண்டும். வாழ்க்கை புரிய வேண்டும். Enlightenment ஆகா வேண்டும்.

சட்டென்று பிரபலம் ஆகி YouTube channels -ku பேட்டி கொடுக்க வேண்டும்.

சும்மா இருப்பதற்கு நெறைய பணம் வேண்டும். வேலை பார்க்க கூடாது.

நெறைய பணம் சம்பாதித்து, மனைவி முன் hero ஆகா வேண்டும்.

சும்மா இருக்க வேண்டும்.

புது பைக் வேண்டும்,  புது சைக்கிள் வேண்டும். புது கார் வேண்டும்.

வாழ்வில் கஷ்டங்கள் ஏற்பட கூடாது. வாழ்வில் நன்மை மட்டுமே நிகழ வேண்டும்.

—————

எதுவும் முடியவில்லை. எல்லா முயற்சிகளையும், பயிற்சிகளையும், நம்பிக்கைகளையும், தத்துவங்களையும் கைவிட்டுவிட்டு சும்மா இருக்கிறேன்.