தொட்டுவிட்டேன் பெத்துவிட்டேன். இனி என்னை கடவுள் கூட மீட்க முடியாது.
பெண்ணைத் தொட்டு கணவன் ஆனேன். பிள்ளைகள் பெற்று தந்தை ஆனேன்.
மனைவி பிள்ளைகள் ஆகியோரது தேவைகளை பூர்த்தி செய்வதே என் கடமையை உள்ளது. கடவுளை மறந்தேன், இறைவனை நினையேன், ஆரோக்கியம் தொலைத்தேன், பொருளாதாரம் இழந்தேன்.
எப்போதும் மனைவி பிள்ளைகள் பற்றிய யோசிக்க வேண்டும். அவர்களுக்காகவே நேரம் செல்ல விட வேண்டும். உடலில் சக்தியும் மனதில் சக்தி அனைத்தும் குடும்பத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும். மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் அதை என்னுடைய விருப்பத்தில் பயன்படுத்தலாம். மிச்சம் மீதியை நான் ஆன்மீகத்திற்காகவோ அல்லது பயணத்திற்காகவோ செலவிடுவேன். பயணம் என்றால் வெகுதூரம் அல்ல. சாலிகிராமத்தில் இருந்து தாம்பரம் வரை. அவ்வளவுதான் என் பயணம். ஆன்மீகம் என்றால் கடுமையான தவம் அல்ல. குர்ஆன் படிப்பது தொழுகை செய்வது அவ்வளவுதான். அல்லது புத்த மதம் சார்ந்த புத்தகங்களை படிப்பது. புத்த தத்துவங்களை தெரிந்து கொள்வது. அவ்வளவுதான் அதற்கு மேற்கொண்டு எதுவும் இல்லை.
தெரு நாய்களில் ஆண் நாய், இனப்பெருக்கம் முடிந்தவுடன் பெண்ணை விட்டு விலகிச் சென்று விடுகிறது. அதற்கு குடும்ப பொறுப்பு கிடையாது. தெருவில் வாழும் ஆண் நாய் சுமையற்று சுதந்திரமாய் வாழ்கிறது.
மனிதர்களில் ஆண், அதுவும் குடும்பப் பொறுப்பை சுமக்கும் ஆண் ஒரு முட்டாள். குடிகாரனாகவோ, வேலைக்கு போகாமல், சம்பாதிக்காமல் இருக்கும் பொறுப்பற்ற ஆணாக இருப்பவர்கள் புத்திசாலிகள்.
