பசி உயிர் வாழ்றதுக்கு ரொம்ப அவசியம். பசிச்சு அதுக்கு உணவு சாப்பிட்டுட்டு அதுதான் உடலுக்கு சக்தி கிடைஞ்சு அப்பதான் உடலில் உயிர் இருக்கும். பசியை புறக்கணிக்க முடியாது. உணவு உண்ணாமலிருக்க முடியாது. உயிரோடியிருக்கின்றவரை உடல்… இருக்கின்றவரை பசி, உணவு, உண்டல் இதெல்லாம் இருந்தாகணும்.
அந்த பசி நம்ம இப்ப பசிச்சா போது சாப்பிடுறோம், வயிறு நிறைஞ்சிடுது, ஒரு திருப்தி வந்திடுது. அந்த திருப்தி நிலைந்தரமான திருப்தி இல்ல. ஒரு நாலு மணிநேரம், அஞ்சு மணிநேரம் வச்சு மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சிடுறது, மறுபடியும் உணவு தேவைப்படுறது, உண்டல் தேவைப்படுறது. இது முடிவில்லாதது. இது ஒரு சுழற்சி. திரும்ப திரும்ப நடந்து நிகழ்ந்துட்டே இருக்கும். ஆனா இந்த நிகழ்வு இந்த சுழற்சி உயிர் வாழ்றதுக்கு உடலுக்கு ரொம்ப அவசியம். இல்லாட்டி உடம்பு சோர்வடஞ்சுரும் உயிர் போயிடும் அல்லது உடல் கெட்டுப் போயிடும்.
அதே மாதிரிதான் ஆசையும் மனசுக்கு. ஆசைன்னு தோணிட்டே இருக்கும். ஒரு ஆசை முடிஞ்சோன்னா அடுத்த ஆசை. அடுத்த ஆசை முடிஞ்சோன்னா அடுத்த ஆசை. இது முடிவில்லாதது. ஆசையை துன்பத்துக்கு காரணம் புத்தன் சொல்றதா சொல்றாங்க, ஆனா அதுமாதிரி புத்தன் எங்கேயும் சொல்லல. ஆசையை புறக்கணிக்கிறது மனசுக்கு கெடுதல். எப்படி பசியை புறக்கணிச்சா உடலுக்கு கெடுதல், அதுமாதிரி ஆசையை புறக்கணிச்சா மனசுக்கு கெடுதல்.
ஆசையை நுகர்வது, ஆசையை தூய்தல் என்பது மனதுக்கு உற்சாகம் தரக்கூடிய மன ஆரோக்கியத்துக்கு நல்ல விஷயம்தான். உணவை புறக்கணிக்க முடியாதபோல, புறக்கணிக்க முடியாதது போல் நுகர்வை புறக்கணிக்க முடியாதது.
ஆனா இந்த ஆசைக்கு முடிவு கிடையாது. ஒருத்தருக்கு வீடு வாங்கணும்னா ஆசைப்பட்றான்னா வீடு வாங்கிறாரு. அதுவும் ஆசை முடியுமா அப்புறம் பெரிய வீடு, அப்புறம் ஒரு சின்ன வீடு, அதுவும் முடிஞ்சுபோச்சா மீண்டும் ஒரு இடம் வாங்கணும்னு ஆசைப்படுவாங்க. இதுக்கு முடிவு கிடையாது.
அப்ப எல்லாரும் ஆசையை அனுபவிக்க முடியுமா, அனுபவிக்கணுமா அப்படின்னு பார்த்தீங்கன்னா அது அவங்களுடைய சக்திக்கும் ப்ரீகண்டிஷன்ஸுக்கும்(pre-conditioned) சார்ந்தது. பசி இருக்குது. அவன் இட்லி சாப்பிட்றானா, தோசை சாப்பிட்றானா, கஞ்சி சாப்பிட்றானா, பிரியாணி சாப்பிட்றானா, கூல் சாப்பிட்றானா, கறிக்குழம்பு சாப்பிட்றானா அப்படின்றது அவங்க சூழ்நிலை, அவங்க சக்திக்கு, அவங்க பொருளாதார சக்திக்கு, அவங்க இருக்குற குடும்ப சூழ்நிலை அமைப்பு இதெல்லாம் பொருத்துதான் முடிவாகும். அதே போல்தான் ஒரு ஆசை வந்தான்னா அதை அனுபவிக்கிறது எப்படி, அந்த நுகர்வு எப்படி என்றது அவங்களுடைய பொருளாதார தன்மை, மற்றும் அவங்களுக்கு தூய்தக்கூடிய வாழ்வியல் சூழ்நிலை பல காரணங்கள் சார்ந்துதான் முடிவாகும்.
அதே சமயத்துல புரட்சூழலுகளோட சார்பு மட்டும் இல்லாம மனிதன் முயற்சி அவசியம். பசியை போக்குறதுக்கு மனிதன் உழைக்கிறான், விவசாயம் பண்ணுறான், அந்த மாதிரி ஆசை நுகர்வத்துக்கு மனிதன் உழைக்கிறான், போராட்டம் செய்கிறான், இதெல்லாம் பண்ணுறான். அதனால் மனிதன் முயற்சி, புரட்சூழல் ரெண்டுமே ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது.
உணவு உண்றுதாண் ஆகணும். ஆசை நுகர்ந்துதான் ஆகணும் . ஆசையை நுகராட்டி மனசு சோர்வடஞ்சிடும். அப்போ ஆசை நமக்கு கெடுதல் கிடையாதா? இருக்கு. உணவு நமக்கு கெடுதல் கிடையாதா? இருக்கு. அளவுக்கு அதிகமான உணவு உண்டல் உடலுக்கு கெடு. உடல் பருமன் மற்றும் பல வியாதிகள்ல அது கொண்டு வந்து சேர்ந்திடும். அதுபோல அளவுக்கு அதிகமான ஆசை நுகர்வதும் கெடுதல்தான். அது பொருளாதார சிக்கல்ல கொண்டு வந்து விடும். அளவோட இருக்கணும்.
எங்க, எப்ப நிறுத்தணும்ற அறிவும் விழிப்புணர்வும் அவசியம். அப்படி இல்லாதவங்க அதிகம், அப்படி இல்லாதவங்க உணவை உண்டே அதிகப்படியான உணவினாலே உண்டே மரணிக்கிறார்கள். அதுபோல ஆசையினாலே அழிந்து போகிறார்கள் மனிதர்கள். அளவுக்கு அதிகமான ஆசையினாலே அழிந்து போகிறார்கள்.
உணவு எப்படி உடலுக்கு அவசியம், ஆசை மனதுக்கு அவசியம். இந்த உலக இயக்கமே உயிர் வாழ்தல் மற்றும் ஆசை நுகர்வு இதன் அடிப்படையில்தான் இருக்கு. ஒரு ஒரு உயிர் ஒரு செல் உயிரில் இருந்து, மரம் செடி கொடி விலங்குகள் பறவைகள் மீன்கள் மனிதர்கள் என்ற எல்லாமே உணவுக்காகவும், உயிர் வாழ்றதுக்காகவும் ஆசைக்காகவும் தான் இயங்குறது. இல்லாட்டி உலக இயக்கமே இல்ல.
அந்த எங்க நிறுத்தணும்ன்ற அறிவும் , விழிப்புணர்வும் அனுபவத்தைல கிடைக்கக்கூடியது. சுயகட்டுப்பாட்டில் கிடைக்கக்கூடியது அது ஒரு வரம்.
உடலுக்குப் பசி → உணவு → உண்டல் → திருப்தி → மீண்டும் பசி.
மனதிற்கு ஆசை → முயற்சி → நுகர்வு → திருப்தி → மீண்டும் ஆசை.
