எவர் துன்பத்தையும், கஷ்டத்தையும், கவலையையும், நஷ்டத்தையும், நோயையும், மரணத்தையும், அவமானத்தையும், வறுமையையும், தோல்வியையும், பயத்தையும், நிலையாமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்கு கடவுள் தேவையில்லை.
எவர் மரணத்திற்கு பின் நரகத்தை ஏற்றுக்கொள்கிறாரோ, அவருக்கு கடவுள் தேவையில்லை.
எவர் துன்பத்தை ஏற்று கொள்கிறாரோ, அவருக்கு புத்தனும் தேவையில்லை… கடவுளும் தேவையில்லை.
வாழ்வின் பல பதிலற்ற கேள்விகளுக்கு விடை தேடாதவர்களுக்கு, ஆன்மீகமும் தேவையில்லை… தத்துவமும் தேவையில்லை.
