ஆன்மீக பயிற்சிகளும் அதன் பயன்களும் அனைவருக்கும் கிட்டாதது ஏன்?

சிலருக்கு ஆன்மீக பயிற்சிகளால் பயன்கள் உண்டாகுவதாக கூறுகிறார்கள். பலருக்கு ஆன்மீக பயிற்சிகளால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். எது சரி எது தவறு.

இரண்டுமே சரிதான், இரண்டுமே தவறுதான்.

குழந்தைகள் பொம்மைகளோடு விளையாடும்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். பொம்மை மகிழ்ச்சியை தருகிறதா? பொம்மையுடன் விளையாடும் அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டககிறதா? பெரியோர்கள் பொம்மைகளிடமிருந்து மகிழ்ச்சி அடைவது இல்லை.

பொம்மையை பார்த்தவுடன் மகிழ்ச்சி குழந்தையின் மனதில் ஊற்றெடுக்கிறது… மனதில் ஊற்றெடுக்கிறது. பொம்மையில் எந்த உணர்வும் இல்லை. குழந்தையின் மனதில்தான் உணர்ச்சிகள் உள்ளன.

பெரியோர்களுக்கு பொம்மையை பார்த்தவுடன் எந்த உணர்வும் தோன்றுவதில்லை.

மகிழ்ச்சியை உண்டாகக்கூடிய புற உலக பொருட்கள் மனிதர்களின் வயதுக்கேற்ப மாறிக்கொண்டே உள்ளது. மூன்று வயதில் மகிழ்ச்சி உண்டாகக்கூடிய பொருட்கள் பத்து வயதில் மகிழ்ச்சி உண்டாக்குவதில்லை. பத்து வயதில் மகிழ்ச்சி உண்டாகக்கூடிய பொருட்கள் இருபது வயதில் எந்த உணர்வையும் தோற்றுவிப்பதில்லை. இருபது வயதில் மகிழ்ச்சி தந்த விஷயங்கள் நாற்பது வயதில் உணர்வற்று விடுகிறது. வயது மற்றும் அனுபவத்திற்கேற்ப மகிழ்ச்சி உண்டாக்கும் விஷயங்கள் மாறிக்கொண்டே உள்ளது.

ஆன்மீக பயிற்சிகள் “பலன்களை தருவதற்கு” நீங்கள் அதற்கேற்ற மனநிலையில் இருக்க வேண்டும். நீங்கள் அந்த மனநிலையில் இருந்தால் , ஆன்மீக பயிற்சியின் மூலம் உங்கள் மனது மகிழ்ச்சியை உருவாக்கும். இல்லையெனில் உங்கள் மனது மகிழ்ச்சியை/பலன்களை உருவாக்காது.

நீங்கள் குழந்தயாய் இருந்தால் மட்டுமே, பொம்மைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். வேறு எந்த நிலையில் இருந்தாலும் உங்களுக்கு பொம்மைகள் மகிழ்ச்சியை உண்டாக்காது.

ஆன்மீக பயிற்சியின் “பலன்களை” பெற, நீங்கள் அதற்குரிய மனநிலையில் இருக்க வேண்டும். இல்லை எனில் உங்களுக்கு எந்த பலனும் கிட்டாது.

ஆன்மீக பயிச்சிக்குரிய மனநிலை என்ன? அதைப்பற்றி பின்பு எழுதுகிறேன்.