நல்ல வாழ்வு என்பது ஆரோக்கியமும் பொருளாதாரமும் நிறைவாக பெற்று நம்மைச் சுற்றி நாம் நேசிக்கும் மனிதர்களும் நம்மை நேசிக்கும் மனிதர்களும் இருப்பதுதான். நல்ல வாழ்வு வாழ்கிறவர்கள் கடவுள், சொர்கம், நரகம், விதி, கர்மா, பாவம், புண்ணியம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் இவைகளைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் எந்த கவனமும் இல்லாமல் எந்த சிந்தனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். நல்ல வாழ்க்கை வாழாதவர்கள் இவைகளைப் பற்றி யோசிப்பார்கள்.
கஷ்டம் இல்லாதவர்கள் கடவுளைப் பற்றி யோசிக்க மாட்டார்கள், விதியைப் பற்றி யோசிக்க மாட்டார்கள், மரணத்தைப் பற்றி யோசிக்க மாட்டார்கள், சுவர்க்கம் நரகத்தைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். கஷ்டம் இருந்தால் இவை யனையத்தையும் யோசிப்பார்கள்.
