எது சரி எது தவறு

இது சரி , இது தவறு என்று எதுவும் இல்லை. வலிமையின் தரப்பு நியாயம் என்று ஏற்றுக்கொள்ள படுகிறது அல்லது திணிக்கப்படுகிறது. பலகினமானவர்களின் தரப்பு அநியாயம் என்று கற்பிக்கப்படுகிறது. இதுவே மனித உலகின் , மனிதர்களின் நியதி ஆகும்.

புலியின் நியாயம், மானுக்கு அநியாயம். மானின் நியாயம், புலிக்கு அநியாயம்.

மானை வேட்டையாடாதே பாவம் என்று புலிக்கு சொல்லமுடியாது. புலி பட்டினி கிடந்தது இறந்து விடும்.

புலியிடமிருந்து தப்பி செல்லாதே, புலி பாவம் என்று மானிடம் சொல்லமுடியாது. மான் இறந்து விடும்.

மானை கொன்ற பாவம் புலியை சேருமா, அல்லது புலியிடமிருந்து தப்பித்து புலியை பட்டினி போட்ட பாவம் மானை சேருமா. யார் சரி, யார் தவறு.

அவரவர் தரப்பு அவரவர்க்கு நியாயம்.

பகத்சிங் தவறு என்று சொன்னது பிரிட்டிஷ் அரசாங்கம். பகத்சிங் சரி என்று சொன்னது இந்தியா. வலிமையானது அதன் பார்வையில் இருந்து சரி தவறை முடிவு செய்கிறது. பிரிட்டிஷ் வலிமையில் இருந்தபோது தவறு என்று கருதப்பட்டது, இந்தியா வலிமை பெற்ற பின் சரி என்று கருதப்பட்டது.

வலிமை ஒருவரிடமிருந்து ஒருவருக்கு மாறிக்கொண்ட இருக்கும், நியதிகளும் மாறிக்கொண்டே இருக்கும், சரியும் தவறும் மாறிக்கொண்டே இருக்கும்.

சரி என்பதும் தவறு என்பதும் சுயநலத்தை அடிப்படையாகக்கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

உங்களை யாரேனும் தவறு என்று கூறினால், அது அவர்களது சுயநலத்தின் அடிப்படையில் அவர்கள் உருவாக்கிக்கொண்ட ஓர் கருத்து ஆகும். உண்மையில் நீங்கள் தவறல்ல, உண்மையில் தவறென்றும் சரியென்றும் எதுவும் இல்லை.

மனித சட்டம் என்று ஒன்று உள்ளது, அது பலகினமானவர்களை தண்டிப்பதற்க்காக வலிமையானவர்களால் உருவாக்கப்பட்டதாகும். பாரபட்சமற்ற நீதி என்பது மனிதர்கள் உலகில் கிடையாது.

இயற்கையின் நியதி புரிந்துகொள்ள முடியாதது. இயற்கை, மனித நியதிகளை அது விரும்பும்போது மாற்றி அமைந்துவிடும். பாரபட்சமற்ற நீதி இயற்கையிடம் மட்டுமே உள்ளது.