இறந்தோரை நினைத்து மகிழுங்கள்.

இறந்தோரை நினைத்து மகிழுங்கள்.

தற்போதைய வாழ்வென்பது, மிகக் கடுமையாக உள்ளது. ஜனநாயகம் என்பது ஊழலை அங்கீகரித்துக்கொள் என்கிறது. விலைவாசி உயர்வை அரசாங்கம் கட்டுக்குள் கொண்டு வர விரும்பவில்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே இருக்கிறது.

புதிய நோய்களும், வாழ்வியல் குறைபட்டு நோய்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. மருத்துவ செலவுகள் விண்ணை முட்டுகிறது.

நாற்பது வயதிற்குமேல் வேலைக்கு உத்திரவாதம் இல்லை.

போதிய வருமானம் இல்லாதவர்கள், இல்லற வாழ்வில் படும் அவமானங்களும் துன்பங்களும் சொல்லி மாள.

பெற்ற பிள்ளைகளை சோசியல் மீடியாவுக்கு தத்து கொடுத்து விட்டு, பெற்றோர் தினம் தினம் வேதனை படுகின்றனர்.

கல்விக்கட்டணம் விண்ணைத்தாண்டி நிலவை சென்றடைந்துந்து விட்டது.

கடன் வாங்காத மனிதர்களை காண்பதரிது.

வாய்ப்பு கிடைக்கும் பொது, மனிதர்கள் அனைவரும் தங்கள், பேராசை ஆணவம் அகங்காரம் இச்சை சுயநலம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர் .

எனக்கு முக்கியத்தும் குடு, எனக்கு மரியாதை குடு என்று மனிதர்கள் அனைவரும் கூப்பாடு போடுகின்றனர்.

அனைவரும் ஆதிக்கம் செலுத்த அடிமைகளை எதிர்பார்க்கிறார்கள்.

அனைவரும் அதிகாரம் செய்ய அலைகிறார்கள்.

பணம் சம்பாதிக்க முடியாதரவர்கள் அடுத்தவரை சுரண்டுவதற்கு தயங்குவதில்லை.

விதிவிலக்கின்றி அனைவரும் மாட்டிக்கொள்ளாத வாய்ப்புக்கு காத்திருக்கின்றனர்.

தற்போதைய காலத்தில், போதிய வருவாய்க்கு, ஒருவர் பதினைந்து அல்லது பதினாறு ஆண்டுகள் கல்வி கற்க வேண்டும். அதன் பின் எதாவது வருவாய் ஈட்டும் தொழில் பயிற்சியில் மூன்று அல்லது ஐந்து ஆன்டுகள் அனுபவம் பெற வேண்டும். பின்பு அனுபவம் பெற்ற தொழில் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு அந்த தொழிலுக்கு சமூகத்தில் தேவை இருக்க வேண்டும்.

காட்டுவாசியாக இருந்த பொது, வாழ்வாதாரம் என்பது எளிமையான விஷயமாகும். தற்போதைய காலகட்டத்தில், வாழ்வாதாரம் என்பது கடினமான மற்றும் குழப்பமான விஷயமாக உள்ளது. நீண்ட கல்வி மற்றும் தொழில் அனுபவம் அவசியம். ஆகா மொத்தம் இருவது ஆண்டுகள் ஒருவர் அர்ப்பணிக்க வேண்டியுள்ளது.

இத்தகைய இருவது வருட அர்ப்பணிப்பை செய்ய இயலாத சோசியல் மீடியாவின் குழந்தைகள், மனிதர்களுடைய பூமி வாழ்வை விட்டு விடை பெறுவது அவர்களுக்கு நல்ல விஷயம் ஆகும்.

இத்தகைய சூழலை விட்டு ஒருவர் வெளியேறுகிறார் என்றால் அதற்காக அவருக்காக மற்றவர்கள் உயிரோடுஇருப்பவர்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.